Friday 3 May 2013

Facebook கணக்கு திருடப்படுவதில் இருந்து பாதுகாப்பு பெறுவது எப்படி?

facebook வழங்கும் பாதுகாப்பு உக்திகளை கடைபிடித்தால் உங்களுடைய கணக்கு திருடப்படுவதை தடுக்கலாம்.

கடவுச்சொல்

facebook பயன்படுத்துகையில் முக்கியமானதாக கருதப்படுவது கடவுச்சொல். password என அழைக்கப்படும் இதை வலுவாக அமைக்கவேண்டும் என்பதே facebook முதன்மையான வேண்டுகோள்.

இந்த கடுவுச்சொல்லை வலுவானதாக்க குறைந்தது 6 எழுத்துக்கள் கொண்டதாகவாவது இருத்தல் சிறப்பு. அதில் !@#$%^ இம்மாதிரி குறியீடுகளையும் சேர்ப்பது பாதுகாப்பிற்கு முக்கிய வழிவகுக்கும்.

மொபைல் எண்

மற்றுமொரு பாதுகாப்பு முறையானது சரியான செல்போன் எண்னை கொடுத்து பாதுகாப்பது. வேறு யாராவது பயன்படுத்தினால் உங்களுக்கு குறுஞ்செய்தி மூலமாக தகவல்கள் கிடைக்கும்.

பாதுகாப்பான பிரௌசிங்

facebook இல் செக்யூர் பிரவ்சிங் என்ற முறையும் உள்ளது. இதனாலும் ஹேக் நடக்காமல் தடுக்கலாம். இதை பயன்படுத்தினால் சாதாரணமாக http:// என இருக்கும் URL ஆனது https:// என்று மாற்றப்படும். இதனை பயன்படுத்தினால் ஹேக் நடக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு.

லாகின் அப்ரூவல்

எந்த கணினி உங்களுடைய facebook கணக்கை பயன்படுத்தலாம் என்பதையும் நீங்களே தீர்மானிக்கலாம். மொபைல் போன்களில் பயன்படுத்தலாமா வேண்டாமா என்பதையும் தீர்மானிக்கலாம்.

செஷன் முறை

facebook பயன்பாட்டில் செஷன் என்ற ஒரு முறை உள்ளது. இது நீங்கள் உள்நுழைந்து வெளியேறும் வரையுள்ள நேரம் எனப்படுகிறது. சில நேரங்களில் லாக்அவுட் செய்யாமல் இருந்தால் பிரீவியஸ் செஷன் பகுதிக்கு சென்று லாக்அவுட் செய்துகொள்ளலாம்.

பிரைவேட் பிரவ்சிங்

உலவிகளின் பிரைவேட் பிரவ்சிங் என்ற முறையை பயன்படுத்துவதும் சிறப்பானதே!

மேலும்

facebook பயன்படுத்துகையில் ஆங்காங்கே காணப்படும் கேடுகெட்ட சில லிங்க்குகளை கிளிக்செய்கையில் கவனம் தேவை. பெரும்பாலும் ஆபாச படங்களாகவே ஸ்பேம் வைரஸ்கள் பரவி உங்களுடைய facebook கணக்கை முடக்கவும் வாய்ப்புகள் அதிகம்.

facebook பயன்படுத்தி முடித்தவுடன் அதை கண்டிப்பாக லாக்அவுட் செய்யவேண்டும் என்பது facebook நிறுவனத்தின் முக்கியமான வேண்டுகோள். ஏனெனில் facebook செஸன் என்ற முறையானது மிகவும் திறன்வாய்ந்தது. எனவே நீங்கள் உங்களுடைய facebook கணக்கை லாக்அவுட் செய்யவில்லை என்றால், சில மாதங்கள் கூட அது அப்படியே இருக்கவும் வாய்ப்புகள் அதிகம். வேறு யாராவது கூட அதை பயன்படுத்த முடியும் என்பதை மனதில் வைக்கவும்.