Monday 25 March 2013

திருட்டுப் பதிப்பிற்கு விண்டோஸ் 8 இன் லைசென்ஸை வழங்கிய மைக்ரோசாப்ட்?

உலகில் அதிக தடவை பைரேட் செய்யப்பட்ட மென்பொருட்களாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் , ஆபிஸ் பதிப்புக்கள் இருந்து வருகின்றன.

குறிப்பிட்ட விண்டோஸ் பதிப்பு வெளிவந்ததும் அவற்றை ஹேக் செய்து பயன்படுத்துவதற்கென ஏராளமான டூல்களும் இணையத்தில் கிடைக்கின்றது.  

விண்டோஸ் 7 பதிப்பை ஆக்டிவேட் செய்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தையே அது ஒரிஜினல் பதிப்பென நம்ப வைப்பதில் **** activation  என்ற டூல் மிக பிரபலமானது. (பெயர் மறைக்கப்பட்டுள்ளது)

இந்நிலையில் அண்மையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 8 பதிப்பை முந்தைய பதிப்பான விண்டோஸ் 7 இலிருந்து குறைந்த விலையில் அப்கிரேட் செய்வதற்கு வாய்ப்பளித்தது.

இங்கே தான் சிக்கல் உருவாகியுள்ளது. உண்மையில் முழுமையாக பணம் செலுத்தப்பட்டு வாங்கிய விண்டோஸ் 7 இன் ஒரிஜினல் பதிப்பை மட்டுமே இவ்வாறு அப்கிரேட் செய்ய விட்டிருக்க வேண்டும் ஆனால் தவறுதலாக **** activation டூல் மூலம் ஹேக் செய்யப்பட்ட விண்டோஸ் 7 பதிப்பையும் 40 டாலர்களுக்கு அப்கிரேட் செய்ய முடிவதாக பிரபல தொழில்நுட்பத்தளங்களான extreme tech , Forbes, Computer world ஆகிய தளங்கள் தற்போது தெரிவித்துள்ளன.

இது உலகின் முண்னனி மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோசாப்டின் கவனக்குறைவால் ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கு தீர்வாக மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கிவரும் சலுகை விலையில் அப்கிரேட் செய்வதை உடன் நிறுத்துவது மட்டுமே ஆகும் எனவும் மென்பொருள் துறை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

அவ்வாறு செய்ய நேர்ந்தால் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு கெளரவப் பிரச்சனையாக உருவெடுக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.