Friday 14 September 2012

Windows 8 அக்டோபர் 26 சந்தைக்கு வருகிறது

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது Windows 8 பதிப்பை மிக வேகமாக மேம்படுத்தி வருகிறது. இனி வரும் காலங்களில் மேசை கணினியை விட கையடக்க கணினி பயன்பாடு அதிகமா இருக்கும் என்பதை உணர்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனம் அணைத்து சாதனங்களும் பயன்படுத்தும் வகையில் மிக எளிமையான Windows 8 பதிப்பை வெளியிட உள்ளது.

Windows 95 அறிமுகம் செய்ததில் இருந்து இன்று வரை வளர்ந்து வரும் மைக்ரோசாப்ட் நிறுவனம் Windows 8 பதிப்பை வெளியிடுவதன் மூலம் மேலும் ஒரு புதுமையான உலகிற்கு நம்மை எல்லாம் அழைத்து செல்லும் என்று நம்பலாம்.

Steven Sinofsky, president of Microsoft's Windows அவர்கள் ஏற்கனவே Windows 8 அக்டோபர் மாதம் வெளிவருகிறது என்று அறிவித்திருந்தார். தற்பொழுது Windows 8 வெளியிடும் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Windows 8 அக்டோபர் மாதம் 26 தேதி அன்று சந்தையில் விற்பனைக்கு வருகிறது.  கைக் கணினிகளின் சிறு சாதனங்கள் வழியாக எண்ணற்ற பயன்பாடுகளை எளிமையாக்க Windows 8 மிகச் சிறந்த தொகுப்பாக அமையும் என்று எதிர்பார்கலாம்.

இதன் முந்தய பதிப்பான Windows 7 இதுவரை 70 கோடி வரை விற்பனையாகியுள்ளது. காத்திருங்கள் Windows 8 பதிப்பை பெற அக்டோபர் 26 வரை.