Saturday 12 November 2011

டிஜிட்டல் கமெரா வாங்க விரும்புபவர்களுக்கு உதவும் இணையம்

புகைப்படம் எடுப்பது பலருக்கும் பொழுது போக்காக இருந்தாலும் பல நேரங்களில் சிறந்த கமெரா எதுவென்று தெரியாமல் நமக்கு பயன்படாமலே இருக்கும். ஒரு நாட்டில் கிடைக்கும் கமெராக்கள் மற்றொரு நாட்டில் கிடைப்பதில்லை என்ற காலமெல்லாம் மலையேறிவிட்டது, ஆம் உலகின் எந்த நாட்டில் இருந்தும் எந்த நிறுவனத்தின் கமெராவையும் நாம் வாங்கி கொள்ளலாம், நம் தேவைக்கு தகுந்தபடி சிறந்த கமெரா எது என்பதை நமக்கு சொல்வதற்காக ஒரு தளம் இருக்கிறது. புகைப்படம் எடுப்பதற்காக கமெரா வாங்கினாலும் அதில் குறிப்பிட்டு நம் தேவையை சொல்லி அதற்கான கமெராவை வாங்கினால் மேலும் சிறப்பாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கு இத்தளம் ஒரு வரப்பிரசாதம் தான். என்ன தேவைக்காக பயன்படுத்த போகிறோம், விலை எவ்வளவுக்குள் இருக்க வேண்டும் என்று கொடுத்து தேடினால் பல வகையான நிறுவனங்களின் கமெராவை காட்டும் ஒவ்வொரு கமெராவிலும் இருக்கும் சிறப்பம்சம் என்ன என்பதையும் அதை மற்ற நிறுவத்தின் கமெராவுடன் ஒப்பிட்டும் காட்டும். தற்போது மார்க்கெட்டில் இருக்கும் அனைத்து வகையான கமெராக்களையும் நாம் இத்தளத்தில் சென்று தேடலாம், சில கமெராக்களின் செயல்படும் வீடியோ கூட இத்தளத்தில் காட்டப்படுகிறது. இணையதள முகவரி http://snapsort.com