Sunday 10 April 2011

கூகுள் குரோம் உலவியினை கொண்டு Youtube வீடியோவினை தரவிறக்கம் செய்ய

Youtube தளத்தில் இருந்து வீடியோவினை தரவிறக்கம் செய்ய நாம் இதுவரை பல வழிகளை மேற்கொண்டோம் தற்போது Youtube தளத்தில் உள்ள விடியோக்களை கூகுள்குரோம் உலவியினை கொண்டு தரவிறக்கம் செய்வது எவ்வாறு என்று பார்ப்போம். Youtube தளம் என்பது வீடியோவினை நண்பர்களிட்மோ அல்லது இணைய நண்பர்களிடமோ பகிர்ந்து கொள்ளும் தளம் ஆகும். இந்த தளத்தில் உள்ள வீடியோக்களை யார் வேண்டுமானலும் பார்க்கலாம், வேண்டுமானால் தரவிறக்கம் செய்தும் பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த Youtube தளமானது கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும். இந்த தளத்தில் உள்ள வீடியோக்களை தரவிறக்கம் செய்ய பலவழிமுறைகள் உள்ளன.

கூகுள்குரோம் உலவியினை கொண்டு Youtube தளத்தில் இருக்கும் விடியோவினை தரவிறக்கம் செய்ய முதலில் Youtube தளத்தில் டவுண்லோட் பட்டனை சேர்க்க வேண்டும். அதற்கு ஒரு ஸ்கிரிப்டை கூகுள்குரோம் உலவியில் இணைக்க வேண்டும்.

ஸ்கிரிப்டை இணைப்பதற்கான சுட்டி


ஸ்கிரிப்டை இன்ஸ்டால் செய்ய சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, Install என்ற பொத்தானை அழுத்தவும். பின் ஒரு விண்டோ ஒப்பன் ஆகும், அதிலும் Install என்பதை கிளிக் செய்யவும். தற்போது ஸ்கிரிப்ட் கூகுள் குரோம் உலவியில் இணைக்கப்பட்டுவிட்டது என்ற செய்தி வரும்.


அடுத்து நீங்கள் கூகுள் குரோம் உலவியில் Youtube விடியோவை காணும் போது வீடியோவின் அடிப்பகுதியில் டவுண்லோட் பட்டன் இணைக்கப்பட்டிருப்பதை காண முடியும். இந்த பட்டனை பயன்படுத்தி வீடியோவை டவுண்லோட் செய்து கொள்ள முடியும்.